புதன், 11 அக்டோபர், 2017

7வது ஊதியக்குழுவின் முழு விவரம்

புதிய ஊதிய நிர்ணய பெருக்குக்காரணி 2.57 நிர்ணயிக்கப்பட்டது எவ்வாறு???
புதிய ஊதிய நிர்ணயம் பின்வருமாறு  இருக்கும்...

1.1.2016 அன்று ஊழியர்கள் பெற்றிருந்த அடிப்படை ஊதியமும், தர ஊதியமும் சேர்ந்தது 100%. அன்றைய தேதியில் தரப்பட்டிருந்த அகவிலைப் படி 125%.

ஊதியம் + அகவிலைப் படியின் கூட்டுத் தொகை 225%.

ஏழாவது ஊதியக் குழு, தனது பரிந்துரையில் 14.29 சதவிகித உயர்வை வழங்கியுள்ளது.

அதன்படி, 225 சதவிகிதத்தில் 14.29% உயர்வு என்பது 32% ஆகும்.

அப்படியானால் 100+125+32 = 257%.

இதுதான் அனைவருக்கும் பொதுவான ஊதிய நிர்ணயமுறை.

இந்த 257 சதவிகிதம்தான் 2.57 மடங்கு எனக் குறிப்பிடப்படுகிறது.

எனவே, 1.1.2016 அன்று பெற்றிருந்த அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 என்ற காரணியால் பெருக்கி, பெருக்கி வரும் தொகையை ரூ.100-ன் மடங்குகளில் அமைத்து, ஊதிய நிர்ணய அட்டவணை ஒன்று அமைந்துள்ளது.

இதன்படி நிர்ணயம் செய்யப்படுவதே ‘உண்மை ஊதியம்’ என்று சொல்லப்படும் அடிப்படை ஊதியமாக இருக்கும்.

1.1.2016-க்குப் பிறகு தர ஊதியம் கிடையாது.

*ஊதிய உயர்வு*

வருடத்துக்கு ஒருமுறை ஊழியர்களுக்கு தரப்படும் ஊதிய உயர்வானது, 1.1.2016-க்கு முன்பு இருந்த ஊதியம் + தர ஊதியத்தின் கூட்டுத் தொகையில் மூன்று சதவிதமாகக் கணக்கிடப்பட்டு, ரூ.10-ன் மடங்குகளில் இருந்தது.

01.01.2016-ல் தர ஊதியமானது அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட்டுவிட்டதால்,      1.1.2016-க்குப் பிறகு தரப்படும் ஊதிய உயர்வானது அடிப்படை ஊதியத்தில் மூன்று சதவிகிதமாகக் கணக்கிடப்பட்டு, ரூ.100-ன் மடங்குகளாக இருக்கும்.

வியாழன், 6 ஜூலை, 2017

ரெயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை

புதுடெல்லி, 

தற்போது, ரெயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. ஆணாக இருந்தால், 40 சதவீத சலுகையும், பெண்ணாக இருந்தால் 50 சதவீத சலுகையும் அளிக்கப்படுகிறது.

மூத்த குடிமக்கள் கட்டண சலுகையால், ரெயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1,300 கோடி இழப்பு ஏற்படுகிறது.

புதிய முறை

எனவே, இதை குறைக்க ரெயில்வே துறை புதிய முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ‘உங்களுக்கு கட்டணத்தில் பாதி சலுகை வேண்டுமா? அல்லது முழு சலுகை வேண்டுமா?’ என்ற கேள்வி கேட்கப்படும்.

இதற்கு மூத்த குடிமக்கள் அளிக்கும் பதிலை பொறுத்து, கட்டண சலுகை அளிக்கப்படும். பாதி சலுகை போதும் என்று கூறினால், அதற்கேற்ப ரெயில்வேயின் இழப்பு குறையும்.

எப்போது அமல்?

இந்த புதிய முறைக்காக, டிக்கெட் வழங்கும் சாப்ட்வேரை தரம் உயர்த்த வேண்டி உள்ளது. அந்தப்பணி முடிந்த பிறகு, இந்த புதிய முறை அமலுக்கு வரும்.

இருப்பினும், மானியத்தை விட்டுக் கொடுக்குமாறு, மூத்த குடிமக்கள் அல்லாத பொதுவான பயணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ரெயில்வே செய்தித்தொடர்பாளர் அனில் சக்சேனா தெரிவித்தார்.

பயணிகளுக்கு அளிக்கும் மானியத்தால், ரெயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. ரெயில்களை இயக்க ஏற்படும் மொத்த செலவில், 57 சதவீத தொகை மட்டுமே திரும்ப கைக்கு வருவதாகவும், மீதி 43 சதவீத தொகை, நஷ்டமாகி வருவதாகவும் ரெயில்வே துறை கூறுகிறது.

புதன், 5 ஜூலை, 2017

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தாமதம்..

மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வு முடிவை வெளியிட சென்னை ஐகோர்ட்டின் மதுரை அமர்வு இடைக்கால தடை விதித்தது. பின்னர் இந்த தடையை கடந்த மாதம் 12–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது. இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் கடந்த 23–ந்தேதி வெளியிடப்பட்டது.
நீட் தேர்வு வெளியிட தடை விதிக்கப்பட்டதன் காரணமாக அதில் வெற்றி பெற்றவர்கள் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தாமதம் ஆனது. இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு கூறிய கால அவகாசத்துக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க இயலவில்லை. எனவே, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை ஆகஸ்டு மாதம் 28–ந்தேதிக்கு உள்ளாகவும், பல் மருத்துவத்துக்கான கலந்தாய்வை செப்டம்பர் மாதம் 10–ந்தேதிக்கு உள்ளாகவும் நடத்தி முடிக்கும் வகையில் அனுமதிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.
இதை சுப்ரீம்கோர்ட்டு ஏற்றுக்கொண்டு இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்த கால அவகாசத்துக்குள் கலந்தாய்வை நீட்டித்து நடத்தி கொள்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது

செவ்வாய், 4 ஜூலை, 2017

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு



வியாழன், 4 ஆகஸ்ட், 2016

www.tntam.in
ADW Schools Transfer 2016-17 - 8.8.2016 அன்று நடைபெற உள்ளது.
Press Release No : 394 Of the Adi Dravidar and Tribal Welfare Department, Chennai - online counselling for Teachers Transfers and postings...

வெள்ளி, 8 மே, 2015

Ration card correct

ரேஷன் கார்டில் பெயர்- முகவரி மாற்றம், திருத்தம் செய்ய வேண்டுமா? சென்னையில் இன்று சிறப்பு முகாம்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
1
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
சனி, மே 09,2015, 3:30 AM IST
பதிவு செய்த நாள்:
சனி, மே 09,2015, 12:25 AM IST
சென்னை,

ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கு வசதியாக சென்னையில் இன்று(சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது.

குறை தீர்க்கும் முகாம்

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

குடும்ப அட்டையில் பெயர்-முகவரி மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் இன்று(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. 

7வது ஊதியக்குழுவின் முழு விவரம்

புதிய ஊதிய நிர்ணய பெருக்குக்காரணி 2.57 நிர்ணயிக்கப்பட்டது எவ்வாறு??? புதிய ஊதிய நிர்ணயம் பின்வருமாறு  இருக்கும்... 1.1.2016 அன்று ஊழியர்கள...